பதிவு செய்த நாள்
20
செப்
2020
03:09
சேந்தமங்கலம்: புரட்டாசி சனிவார பெருவிழாவை முன்னிட்டு, மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் சிறப்பு அபி?ஷகம், ஆராதனை நடந்தது.
புதன்சந்தை அருகே, நைனாமலை உள்ளது. இங்கு, 2,600 அடி உயரம் கொண்ட மலை உச்சியில், வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் புரட்டாசி உற்சவ திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். ஒவ்வொரு சனிக்கிழமையும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், விரதம் இருந்து, இக்கோவிலுக்கு வந்து, சுவாமியை வழிபடுவர். இந்த ஆண்டு, உற்சவ விழா, கடந்த, 12ல் துவங்கியது. தற்போது, கொரோனா ஊரடங்கால், நைனாமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு, கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மலையேறும் பக்தர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாத நிலையில், கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதால், மலையேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, நேற்று, நாமக்கல், சேலம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, சுவாமி வழிபாட்டுக்காக வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, அடிவாரத்தில் உள்ள ஆஞ்சநேயர், உற்சவ மூர்த்தியை வழிபட்டனர்.
* மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவிலில், நேற்று காலை, 8:00 மணிக்கு, விசேஷ அபி ?ஷகம், ஆராதனை, மாலை, 6:00 மணிக்கு, கருட சேவை, திருக்கொடி ஏற்றம் நடந்தது. ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி மாதம், ஒரு ஞாயிற்று கிழமை, திருமலையில் ஒரு நாள் வைபவ நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். அன்றைய தினம், காலை முதல், மாலை, வரை, திருமலையில் சுவாமிக்கு நடக்கும் அனைத்து அபி?ஷக, ஆராதனை நடக்கும். இந்த ஆண்டு, கொரோனா ஊரடங்கு காரணமாக, திருமலையில் ஒரு நாள் ரத்து செய்யப்பட்டு, அடுத்த ஆண்டு வழக்கம் போல் நடக்கும் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.