பதிவு செய்த நாள்
21
செப்
2020
11:09
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அடுத்த தென் திருப்பதி திருமலையில், வெங்கடேஸ்வர வாரி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், பிரமோற்சவ விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு பிரமோற்சவ விழா கடந்த, 19 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, மலையப்பசுவாமி பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்தார். பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி எழுந்தருள்வார். நேற்று மாலை அன்னபட்சி வாகனத்தில், மலையப்ப சுவாமி எழுந்தருளி, திருவீதி உலா வந்தார். 23 ஆம் தேதி இரவு, 7:30 மணிக்கு கருட சேவையும், 24 ஆம் தேதி தங்க ரதமும், 26 ஆம் தேதி காலை, 8:00 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.