பழநி: விடுமுறையை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. செப்.1 முதல் பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால், உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்ட பக்தர்களின் வருகையும் சில நாட்களாக அதிகரித்தது. தேவஸ்தானம் அறிவித்துள்ள கட்டுபாடுகளை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். தானியங்கி கிருமிநாசினி தெளிப்பான், உடல் வெப்பம் அறியும் கருவி மூலம் பரிசோதித்த பின், படிப்பாதை வழியே அனுமதிக்கப்பட்டனர். நேற்று ஞாயிறு விடுமுறையை என்பதால் அதிகாலை முதல் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது.