Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி சென்றது ஸ்ரீவி., ஆண்டாள் ... பத்மாவதி தாயாருக்கு திருக்குடை சமர்ப்பணம் பத்மாவதி தாயாருக்கு திருக்குடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரளச்சியில் தவ்வை சிற்பம் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பரளச்சியில் தவ்வை சிற்பம் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

22 செப்
2020
09:09

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பரளச்சியில் உள்ள தோட்டத்தில் தவ்வை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பாண்டிய நாடு பண்பாட்டு மைய ஆய்வாளர் ஸ்ரீதர் கூறினார்.அவர் கூறியதாவது:தவ்வை வழிபாடு என்பது பல்லவ பேரரசர்கள் காலத்தில் தோன்றியது. தவ்வைக்கு மூத்ததேவி, ஜேஷ்டா தேவி எனவும் பெயர்கள் உண்டு. பாற்கடலில் அமிர்தம் கடையும் போது திருமகளுக்கு முன்பு தோன்றியதால் இவருக்கு மூத்ததேவி என பெயராயிற்று. இவர் சனிஸ்வரருக்கு மனைவி ஆவார். இவர்களுக்கு மாந்தன் என்ற மகனும், மாந்தி என்ற மகளும் உண்டு. பொதுவாக பல்லவ மற்றும் சோழ நாடுகளில் காணப்படும் தவ்வை சிற்பத்தில் தவ்வை மட்டும் பிரதானமாக இருப்பார்.

மாந்தனும், மாந்தியும் சிறிய உருவமாக இருப்பார்கள். ஆனால் தற்போது கிடைக்கப்பட்ட சிற்பத்தில் அது போல் இல்லை. பாண்டிய தவ்வை சிற்பம் அரிதாகவே காணப்படுகிறது. தவ்வையின் வலது கரத்தில் அபய முத்திரையுடன் உள்ளது. இடது கரம் தொடையில் உள்ளது. சிற்பத்தின் அருகே காகக் கொடி உள்ளது.மாந்தன் கையில் அன்னையின் ஆயுதமான துடைப்பம் காணப்படுகிறது.மூத்த தேவிஎன்பது துரதிர்ஷ்டத்தின் சின்னமாக பார்க்கப்படுகிறது. இது தவறு. இவர் பயிர் வளமும், மகப்பேற்று வளத்தையும் அருளும் தேவதை. வட மொழியில் இவரை ஜேஷ்டா தேவி என்பர். இந்த சிற்பம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது ,என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை;  புலி வாகனன் ஐயப்பனை சபரிமலை சென்று தரிசனம் செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஐயப்பன் ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; வடகுரு ஸ்தலமான தட்சிணாமூர்த்தி கோவிலின் பாலாலயம் விமரிசையாக நடந்தது. திருவொற்றியூர், ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், தட்சிணாயன புண்ணிய கால ஆரம்ப வைபவ பூஜை நடைபெற்றது.கோவை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் விடிய, விடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிசட்டி‌ ... மேலும்
 
temple news
பிராட்வே; கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar