புதுச்சேரி;
பக்தவச்சல குண பாண்டுரங்கன் சன்னதியில் வரும் 26ம் தேதி ஆண்டாள் திருப்பாவை
திருக்கல்யாண உற்சவம் நடக்கின்றது.வைத்திக்குப்பம் செல்வராஜ் செட்டியார்
வீதியில் உள்ள ராதா ருக்குமணி பக்தவச்சல குண பாண்டுரங்கன் சன்னதியில்
57-வது புரட்டாசி மாத உற்சவ விழா 19 ம்தேதி துவங்கியது. தொடர்ந்து பஜனை
நடந்தது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.வரும் 26
ம்தேதி ஆண்டாள் திருப்பாவை திருக்கல்யாண உற்சவமும், வரும் 3ம் தேதி 57ம்
ஆண்டு ரத உற்சவமும், 9ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கின்றது. ஏற்பாடுகளை
வேங்கடாசலபதி பஜனை கூடத்தினர் செய்து வருகின்றனர்.