மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே குமரலிங்கம் விளை நிலங்களுக்கு மத்தியில் புதைந் துள்ள சாமி சிலைகளை மீட்டு கோவிலில் வைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மடத்துக்குளம் தாலுகா குமரலிங்கம் அமராவதி ஆற்றுப் பாலம் பகுதியில் பலநூறு ஏக்கர் விளை நிலங்கள்மற்றும் தோப்புகள் உள்ளன. இங்குள்ள நிலப்பர ப்பில் 8 சாமி சிலைகள் கழுத்தளவு, மண் ணில் புதைந்து கிடக்கின்றன. இதில் மூன்று பெண் தெய்வங்கள் சிலையும் உக்கிரமான பூதகணம் போன்ற ஒரு சிலையும், ஹயக்ரீவர் சிலையும், மூன்று தலைகள் உடைய பிரம்மா சிலையும் இங் கு உள்ளன..சிலைகளின் உயரம் உத்தே சமாக ஐந்து அடிகள் இருக்கலாம். காதில் குண்டலங்கள் கழுத்தில் நகைகள் உள்ள தாக சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. உடல்பகுதிமுழுவதும் மண்ணில் புதை யுண்டு உள்ளதால் உடைகள் சிலையின் முழு அமைப்பும் தெரியவில்லை. இதன் காலம் பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தாக இருக்கலாம். திறந்தவெளியில் பரா மரிப்பின்றி அழிந்து வரும் இந்த சிலை களை மீட்டு, கோயில் வைத்து பராமரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்: " சிலைகள் எப்போது,எதற்காக விளை நிலங்களுக்கு மத்தியில் கொண்டு வந்து வைக்கப்பட்டன என தெரியாது. இந்தப் பகுதியில் உள்ள மக்கள் வெள்ளிக்கிழ மை போன்ற விசேஷ நாட்களில் சூடம், பத்தி கொளுத்தி வைத்து வணங்கி செல் வார்கள். இதுகுறித்து தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தால், இதன் காலம் இதன் பின்னணி குறித்து அரிய தகவல்கள் கிடைக்கும்" என தெரிவித்தனர்.