பதிவு செய்த நாள்
23
செப்
2020
10:09
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில், தமிழக பக்தர்கள் சார்பில், ஒன்பது திருக்குடைகளை, ஹிந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர். ஆர். கோபால்ஜி வழங்கினார்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவத்தின்போது, ஆண்டுதோறும், தமிழகத்தில் இருந்து, வெண்பட்டு திருக்குடைகள் காணிக்கையாக வழங்கப்படுகிறது.தமிழக பக்தர்கள் சார்பில், திருச்சானுார் பத்மாவதி தாயார் கோவிலுக்கும், திருமலை கோவிலுக்கும், திருக்குடைகளை சமர்ப்பணம் செய்யும் கைங்கர்யத்தை, ஹிந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் செய்து வருகிறது. இதற்காக, யாரிடமும் உண்டியல் வசூல், நன்கொடைகள் பெறுவது இல்லை.