பதிவு செய்த நாள்
23
செப்
2020
10:09
ஓசூர்: ராமேஸ்வரத்திலிருந்து, அயோத்தி செல்லும், 613 கிலோ எடை கொண்ட பிரமாண்ட மணி, தமிழக எல்லையை நேற்று அடைந்தது. அங்கு, பா.ஜ.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அயோத்தியில், ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக, தமிழகத்திலிருந்து பிரமாண்ட மணி, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்த, லீகல் ரைட்ஸ் கவுன்சில் ஆப் இந்தியா என்ற அமைப்பின் சார்பில், ஐந்தடி உயரத்தில், 613 கிலோ எடையில், இந்த வெண்கல மணி தயாரிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா. தெலுங்கானா, கர்நாடகா உட்பட, 10 மாநிலங்கள் வழியாக, 4,552 கி.மீ., தூரத்தை கடந்து, வரும் அக்., 7ல், அயோத்தி ராமர் கோவிலுக்கு மணி சென்றடைய உள்ளது. தமிழக எல்லையான ஓசூருக்கு நேற்று வந்த மணிக்கு, பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில், உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.