பதிவு செய்த நாள்
23
செப்
2020
12:09
திருச்சி : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தாயார் திருவடி சேவை, இன்று நடைபெற்றது. திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், கடந்த, 17ம் தேதி, நவராத்திரி உற்சவம் துவங்கியது. வரும், 25ம் தேதி வரை நடைபெறும் உற்சவ நாட்களில், தாயார் சன்னதியில் இருந்து புறப்பாடாகும் ரெங்கநாச்சியார், கொலு மண்டபத்தில் எழுந்தருளி, அருள்பாலித்து வருகிறார்.ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வழக்கமாக, ரெங்கநாச்சியாரின் திருவடிகள் தெரியாதவாறு அலங்காரம் செய்யப்படும்.
நவராத்திரி உற்சவத்தின், 7ம் நாளில் மட்டும், ரெங்கநாச்சியாரின் திருவடிகளை பக்தர்கள் தரிசிக்கும்படி அலங்காரம் செய்யப்படும். அதன்படி, இன்று மாலை கொலு மண்டபத்தில் எழுந்தருளி, ரெங்கநாச்சியாரின் திருவடிகள் தெரியும் வகையில், அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்யதனர். மாலை, 4 மணி முதல், 7:30 மணி வரை தாயார் திருவடி சேவை நடைபெறுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தாயார் திருவடி சேவை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவில் அறங்காவல் குழுவினர் செய்துள்ளனர்.