பதிவு செய்த நாள்
26
செப்
2020
02:09
மேட்டுப்பாளையம்: தென்திருப்பதி வேங்கடேஸ்வர வாரி சுவாமி கோவிலில், பிரமோற்சவ தேரோட்டம் நடந்தது.
மேட்டுப்பாளையம் அடுத்த, தென் திருப்பதி திருமலையில், வேங்கடேஸ்வர வாரி சுவாமி கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிரமோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு கடந்த, 19ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில், மலையப்ப சுவாமி எழுந்தருளி, திருவீதி உலா வந்தார்.
இன்று காலை, 8:00 மணிக்கு அலங்காரம் செய்த தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசாமி எழுந்தருளினார். சிறப்பு பூஜைக்கு பிறகு, கோவில் ஊழியர்கள், மில் ஊழியர்கள் ஏகாந்தமாக பங்கேற்று, தேரை இழுத்துச் சென்றனர். இவ்விழாவில் கே.ஜி., தலைவர் பாலகிருஷ்ணன், எம்.எல்.ஏ., சின்னராஜ், முன்னாள் எம்.பி., செல்வராஜ், மாவட்ட கவுன்சிலர் கந்தசாமி மற்றும் கே.ஜி.டெனிம், கண்ணபிரான் மில் தொழிலாளர்கள், பலியானார்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு பங்கேற்றனர்.