ஈரோடு: கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் நடந்த , நடராஜர் அபிஷேகத்தில் மணிவாசகர், தாயார் சிவகாமி அம்மனுடன் ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு புரட்டாசி சுக்லபட்ச சதுர்தசி திதி சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. நடராஜருக்கு ஆண்டுக்கு 6 வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். அதில் ஒன்றான புரட்டாசி மாத சுக்லபட்ச சதுர்தசி திதியை முன்னிட்டு நேற்று கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் சிவகாமி அம்மை உடனுறை நடராஜருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அபிஷேகத்தில் மணிவாசகர், தாயார் சிவகாமி அம்மனுடன் ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மலர்களால் அலங்கரித்த நடராஜர், சிவகாமி அம்மை, மாணிக்கவாசகர் சுவாமிகளுக்கு அலங்கார, ஆராதனை செய்யப்பட்டது.