திருவாடானை : திருவாடானை மங்களநாதன் குளம் அருகே உள்ள அய்யனார் கோயிலில் மழை பெய்யவும், கொரோனா தொற்று நோய் பரவாமல்தடுக்கவும் சிறப்பு பூஜை நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை நடந்தது.திருவாடானை தெற்குரதவீதி மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. பெண்கள் பூ தட்டு எடுத்து ஊர்வலமாக சென்றனர். விழாவை முன்னிட்டு கோயில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருந்தது.