நாமக்கல்: ஆஞ்சநேயர் கோவில், தலைமை கணக்கர், டிஸ்மிஸ் செய்யப்பட்டார். நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தலைமை கணக்கராக பணியாற்றியவர் பெரியசாமி, 55; இவர், பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக, போலி சான்றிதழை சமர்ப்பித்து பணியில் சேர்ந்ததாக கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன், இதுகுறித்து தகவல், கோவில் உதவி ஆணையர் ரமேஷ் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து பெரியசாமியின், பணி பதிவேட்டை ஆய்வு செய்தபோது, சான்றிதழ் நகல் கிழிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து அவர், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கிடையே அரசுத் தேர்வுகள் இயக்குனரகத்திற்கு, கோவில் உதவி ஆணையர் கடிதம் அனுப்பினார். அதில், பிளஸ் 2 வகுப்பில் பெரியசாமி தேர்ச்சி பெற்ற பதிவு எண் அவருடையது தானா என்பது குறித்து, கேள்வி எழுப்பியிருந்தார். அதில், போலி என்பது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம், பெரியசாமி டிஸ்மிஸ் செய்யப்பட்டார். கடந்த, 1992ல் பணியில் சேர்ந்த பெரியசாமி, 1997ல் நிரந்தரமானது குறிப்பிடத்தக்கது.