வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற கோவில் நிர்வாகிகளுக்கு அறிவுரை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03அக் 2020 04:10
நாமக்கல்: கோவில்களில், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, இந்து சமய அறநிலையத்துறை, சேலம் மண்டல இணை ஆணையர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: கொரோனோ தொற்று பரவல் காரணமாக, அரசு வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், வைணவ கோவில்களில் பக்தர்கள் அதிகளவில் வருவது வழக்கம். இந்நிலையில் கோவில்களின் பழக்க வழக்கங்களுக்குட்பட்டு, சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள், 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் நோய் வாய்ப்பட்டவர்கள் யாருக்கும் கோவில்களுக்குள் வருகை தர அனுமதி இல்லை. வருவாய் நிர்வாகம் மற்றும் போலீஸ் துறையுடன் இணைந்து அரசு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, செயல்படவேண்டும் என அனைத்து கோவில்களின் நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. கோவில்களுக்கு உபயமாக கால்நடைகளை வழங்கும் பக்தர்கள், திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டும் நேரடியாக வழங்கி, உரிய உபய காணிக்கை ரசீது பெற்றுச்செல்ல வேண்டும். கால்நடைகளை தனி நபர்கள் எவரிடமும் வழங்க வேண்டாம். தாமாகவே கோவில் சுற்றுப்புற வளாகங்களில் விட்டுச்செல்ல வேண்டாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.