தஞ்சை: தஞ்சை பெரிய கோவிலில் மகா நந்தியம் பெருமானுக்கு பிரதோஷத்தை முன்னிட்டு குடம் குடமாக பால் மற்றும் மஞ்சள் அபிஷேகம் நடந்தது.
தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவில், இந்த கோவிலில் உள்ள நந்திக்கு பிரதோஷ வழிபாட்டின் போது பால், சந்தனம், மஞ்சள், தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். வழக்கம் போல பால், மஞ்சள் உள்ளிட்ட மங்கல பொருட்கள் ஆல் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து பிரதோஷ வழிபாடுகளில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர்.