மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி விழா: அக்.17ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2020 01:10
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி விழா அக்.,17 முதல் 25 வரை நடக்கிறது. இந்நாட்களில் நடக்கும் அம்மனின் அலங்காரத்தை பக்தர்கள் தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோயில் நிர்வாக அதிகாரி செல்லத்துரை கூறியதாவது: நவராத்திரி நாட்களில் தினமும் மாலை 4:00 மணி முதல் 5:30 மணி வரை, மாலை 6:45 மணி முதல் இரவு 8:00 மணி வரை பக்தர்கள் மூலஸ்தான அம்மனை தரிசிக்கலாம். மாலை 5:30 மணி முதல் 6:45 மணி வரை மூலஸ்தான சன்னதியில் திரை போட்டு அபிேஷகம், பூஜைகள் நடக்கும். அச்சமயம் பக்தர்கள் கொலு மண்டபத்தில் உற்ஸவர் அம்மனை தரிசிக்கலாம். அம்மன் மூலவர் அலங்காரத்தை முதல் நாளில் தரிசிக்காதவர்கள் மறுநாள் காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை தரிசிக்கலாம்.அக்.,17 நவராத்திரி முதல் நாள் அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், 18ல் வாதவூர் அடிகளுக்கு உபதேசம், 19ல் சுவாமி தன்னைத்தானே பூஜித்தல், 20ல் விறகு விற்றல், 21ல் கடம்பவ வாசனி, 22ல் வேல்வனை செண்டு தொடுத்தல், 23ல் பட்டாபிேஷகம், 24ல் மகிஷாசூரமர்த்தினி, 25ல் சிவபூஜை அலங்காரத்தில் அருள்பாலிப்பார்,என்றார்.