வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று காலை 6:30 மணி முதல் வனத்துறையினரின் சோதனைக்கு பிறகு மலையேற அனுமதிக்கபட்டனர். பிரதோஷ வழிபாட்டில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தர்கள் தரிசித்தனர். அக்.17 மதியம் 12:00 மணிவரை பக்தர்கள் அனுமதிக்கபடுவார்கள், என அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.