பதிவு செய்த நாள்
15
அக்
2020
05:10
ஈரோடு: பூம்புகார் நிறுவனத்தில், நவராத்திரியை முன்னிட்டு, கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியுள்ளது.
நவராத்திரி விழா வரும், 17ல் தொடங்குகிறது. தொடர்ந்து, ஒன்பது நாட்கள் வீடுகளில் கொலு வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். கொலு பொம்மைகள், ஈரோடு பூம்புகார் நிறுவனத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தாண்டின் புதிய வரவாக, சமபந்தி போஜனம், ராவண கைலயா பர்வதம் பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. வரும், 31 வரை நடக்கும் கண்காட்சியில், காகித கூல், மண்ணால் செய்யப்பட்ட லட்சுமி, கணேஷ், சரஸ்வதி, துர்க்கா பொம்மைகள் விற்பனைக்கு உள்ளன. மேலும், மாகபாரதம் செட், தசாவதாரம் செட், அஷ்டலட்சுமி செட், கல்யாண செட், பள்ளிக்கூடம் செட், திருப்பதி விஸ்ரூபம் செட் பொம்மைகள் விற்பனைக்கு உள்ளன. ராகவேந்திரர், தலைவர்கள் பொம்மைகள், ஜல்லிக்கட்டு, பசுவும் கன்றும், குபேரர், மீராபாய், கோபியர், ஆதிசங்கரர், நவநரசிம்மர், காய்கறிகள், பழங்கள், திருமண வரவேற்பு உள்ளிட்ட செட் பொம்மைகள், மரப்பாச்சி பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. 10 ரூபாயிலிருந்து, 10 ஆயிரம் ரூபாய் வரை பொம்மை செட்கள் உள்ளன. 10 சதவீதம் தள்ளுபடி உள்ளது.