மதுரை : அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் அக்.,26 முதல் 28 வரை தைலகாப்பு உற்ஸவம் நடக்கிறது. அக்.,26 இரவு 7:00 மணி முதல் 7:45 மணிக்குள் ராஜாங்க சேவையுடன் சுவாமிக்கு தைலகாப்பு உற்ஸவம் நடக்கிறது.
அக்.,27 மேட்டுக்கிருஷ்ணன் சன்னதியில் சீராப்பதிநாதன் சேவையும், அக்.,28 காலை 6:45 மணி முதல் 7:20 மணிக்குள் அலங்காரம் முடிந்து சிறிய பல்லக்கில் 9:00 மணிக்கு சுவாமி நுாபுர கங்கைக்கு புறப்பாடாகி காலை 11:30 மணிக்கு ராக்காயி அம்மன் கோயிலில் எழுந்தருளுகிறார். மதியம் 12:00 முதல் 1:30 மணிக்குள் தைலகாப்பு பூஜைகள் முடிந்து மதியம் 2:30 மணிக்குள் சுவாமிக்கு தைலம் சாத்தி தீர்த்தத்தொட்டியில் தீர்த்தவாரி உற்ஸவம் நடக்கிறது. இதில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை. தீர்த்தவாரி உற்ஸவத்திற்கு பிறகே அனுமதிக்கப்படுவர். ஏற்பாடுகளை கோயில் உதவிகமிஷனர் அனிதா செய்து வருகிறார்.