ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பனில் சுவாமி விவேகானந்தர் மண்டபத்தை கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்க ரூ.1.84 கோடியில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது.
பாம்பன் குந்துகால் கடற்கரையில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் பின்புற சுவர், கடந்த ஜூனில் ஏற்பட்ட கடல் அரிப்பால் சேதமடைந்தது. இதனையடுத்து கடலோரத்தில் பாராங்கல்லில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நேற்றுடன் நிறைவடைந்தது.ராமேஸ்வரம் ராமகிருஷ்ண மடம் நிர்வாகி சுவாமி நியாமானந்தா கூறுகையில். கடல் அரிப்பால் சுவாமிஜி நினைவு மண்டபத்திற்கு ஆபத்து ஏற்பட இருந்த நிலையில், தமிழக அரசு துரிதமாக பாராங்கல் தடுப்பு சுவர் அமைத்ததால்,ஆபத்து விலகியது. மேலும் இப்பகுதியில் சுற்றுலா மேம்படுத்திட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.