Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

மிதுனம் : ஐப்பசி மாத பலனும் பரிகாரமும் மிதுனம் : ஐப்பசி மாத பலனும் ... சிம்மம் : ஐப்பசி மாத பலன்கள்! சிம்மம் : ஐப்பசி மாத பலன்கள்!
முதல் பக்கம் » கார்த்திகை ராசிபலன் (16.11.2020 முதல் 15.12.2020 வரை)
கடகம் : ஐப்பசி மாத பலனும் பரிகாரமும்!
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2020
07:09


புனர்பூசம் 4ம் பாதம் :  மாத துவக்கத்தில் சற்று தடுமாற்றத்தை உணர்வீர்கள். அக்.20 முதல் சுதாரித்துக் கொண்டு செயல்படுவீர்கள். உடல்நிலையில் கவனம் தேவை. மருத்துவரின் ஆலோசனை தேவைப்படும். மறைமுக எதிரிகளால் சிரமம் வரலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தினருக்காக செலவழிப்பீர்கள். இக்கட்டான நிலையில் அமைதியுடன் பிரச்னையை சமாளிப்பீர்கள். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். உடன்பிறந்தோர் உதவுவர். தகவல் தொடர்பு சாதனங்கள் பயனுள்ள வகையில் அமையும்.  பொது பிரச்னைகளில் முன்னின்று செயல்படுவீர்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். சொத்து வாங்கும் முயற்சியில் எதிர்பாராத இடைஞ்சல் குறுக்கிடலாம்.  மாணவர்கள் நினைவு ஆற்றலால் வெற்றி காண்பர். உறவினர் வழியில் நடக்கும் விசேஷங்களில் பங்கேற்க இயலாமல் போகலாம். பிள்ளைகளின் விஷயத்தில் தடுமாற்றம் காண்பீர்கள். கொடுக்கல் வாங்கலைத் தவிர்ப்பது அவசியம். வங்கி கடனுதவி பெறக் காத்திருப்போருக்கு தாமதம் ஏற்படும். தம்பதியருக்குள் வீண் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். நண்பர்களிடம் ஒப்படைத்த பணிகளில் தாமதம் ஏற்படும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் விழிப்புடன் செலுத்துவது நல்லது. எதிர்பாராத செலவு ஏற்படலாம்.  பெற்றோரின் மனநிலையைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு தகுந்தாற்போல் நடக்க முயற்சியுங்கள். பணியாளர்கள்  தங்களுக்குரிய பணிகளைத் தாங்களே செய்து முடிப்பது நல்லது.  வியாபாரிகள் நற்பெயரைத் தக்க வைக்க போராட வேண்டியிருக்கும். இரவில் நிம்மதியாக உறங்குவீர்கள். துவக்கத்தில் தடுமாற்றம் ஏற்பட்டாலும்  இறுதியில் வெற்றி உங்களுக்கே.
பரிகாரம் : பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபடுங்கள்.
சந்திராஷ்டம நாள் : அக். 25, 26

பூசம் :     எதிலும் நேர்த்தியை எதிர்பார்ப்பதால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். உணர்ச்சிவசப் படுவதால் மற்றவர் ஏளனத்திற்கு ஆளாகலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள். பொருளாதார நிலை உயரும். உங்களின் பேச்சு மற்றவர் மனதைப் புண்படுத்தக் கூடும். பார்வையில் உண்டாகும் வேறுபாட்டினை அலட்சியப்படுத்தாமல் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. உடன்பிறந்தோருக்கு உதவப்போய் சங்கடங்களை சந்திப்பீர்கள். இசை கலைஞர்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் முன்னேற்றம் காண்பர். உறவினர்களை அனுசரித்துச் செல்லும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பிள்ளைகளின் செயல்பாடு வருத்தம் தரலாம். நீண்ட நாள் கடனை தீர்ப்பதில் கவனம் செலுத்துவீர்கள். தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு தோன்றினாலும்  ஒன்றாக இணைந்து செயல்படுவீர்கள்.  சிக்கன நடவடிக்கை பலன்தராமல் போகலாம். குடும்பப் பெரியவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவீர்கள். பணியாளர்கள் கீழ்நிலைப் பணியாளர்களிடம் எச்சரிக்கையுடன் நடப்பது நல்லது. சுயதொழில் செய்வோர் நிதானமுடன் பேச வேண்டிய சூழல் நிலவும். மனதில் ஒன்றை நினைத்துக் கொண்டு அது நடக்காமல் போகும்போது உளைச்சலுக்கு ஆளாவீர்கள். உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக செயல்பட்டால் வெற்றி காணலாம்.
பரிகாரம் :  மாதப்பிறப்பன்று ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்யுங்கள்.
சந்திராஷ்டம நாள் : அக். 26

ஆயில்யம்:  மாத தொடக்கத்தில் சிரமத்தை சந்தித்தாலும் நவம்பர் முதல் வாரம் முதல் சுகமான சூழல் காண்பீர்கள். சுயமாக சிந்தித்து ஸ்திரமாகச் செயல்படுவீர்கள். வெற்றி ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவீர்கள். சாமர்த்தியமான செயல்பாட்டால் உங்களை முன்னிலைப்படுத்துவீர்கள். வசீகரமான பேச்சு உங்கள் வெற்றிக்கான மூலதனமாக அமையும். குடும்பத்தில் கலகலப்பும் ஏற்படும். குடும்பத்தினர் தனது வார்த்தைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என வலியுறுத்துவீர்கள்.  எல்லோரையும் ஒருங்கிணைப்பதில் முன்னின்று செயல்படுவீர்கள். பொருளாதார நிலை உயரும். கண் நோய்க்கான வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருக்கவும்.  பூர்வீக சொத்து பிரச்யில் தீர்வு காண முற்படுவீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் பொழுதுபோக்கு அம்சமாக பயன்படும். சோஷியல் மீடியாவை பயன்படுத்துவதில் எக்ஸ்பர்ட் ஆக இருப்பீர்கள். மாற்று மொழி பேசுவோர் மூலம் ஆதாயம் உண்டாகும்.  சொத்து வாங்கும் முயற்சிக்கு கடனுதவி கிடைக்கும். உறவினர் ஒருவர் தன் குடும்ப பிரச்னைக்குத் தீர்வு காண உதவி கேட்பார்.  பிள்ளைகளின் செயல்பாடு எதிரானதாக அமையலாம். ஆன்மிக சிந்தனை மனதை  ஆக்கிரமிக்கும். எதிரிகளையும் நண்பர்களாக மாற்றிக் கொள்வீர்கள்.  கடன் பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். நரம்பு பிரச்னையால் தளாச்சி உண்டாகலாம். மனைவியின் கருத்துக்கு மதிப்பளிப்பது நல்லது. கவுரவத்திற்காக செலவு செய்வீர்கள். . பெற்றோர் உடல்நிலையில் கவனம் தேவை. பணியாளர்கள் பணியிடத்தில் முக்கியத்துவம் பெறுவர். சுயதொழில் செய்வோருக்கு புதிய முயற்சி வெற்றி பெறும். வெளிநாட்டு பணிக்காக காத்திருப்போருக்கு நல்ல தகவல் வரும். சாமர்த்தியமான செயல்பாட்டால் வெற்றி காணும் மாதம் இது.
பரிகாரம் : திங்கள் தோறும் சிவனுக்கு வில்வமாலை சாத்துங்கள்.
சந்திராஷ்டம நாள் : அக். 27

 
மேலும் கார்த்திகை ராசிபலன் (16.11.2020 முதல் 15.12.2020 வரை) »
temple
அசுவனி டிச. 9 வரை ராசிநாதன் செவ்வாயின் 12ம் இடத்து வாசம் சற்று அலைச்சலைத் தரும். நினைத்த காரியத்தை செய்து ... மேலும்
 
temple
கார்த்திகை 2, 3, 4ம் பாதம்    இந்த மாதத்தில் நிதானத்தைக் கடைபிடிப்பது அவசியம். மாத துவக்கத்தில் ... மேலும்
 
temple
மிருகசீரிடம் 3, 4ம் பாதம்    ராசிநாதன் புதனின் சஞ்சாரம் சிந்தனையில் மாற்றத்தை தோற்றுவிக்கும். ... மேலும்
 
temple
புனர்பூசம் 4ம் பாதம்     உங்கள் ராசி மீது பார்வையைச் செலுத்தும் குரு மனதில் மகிழ்ச்சியைத் ததும்பச் ... மேலும்
 
temple
மகம் இந்த மாதத்தில் பணிச்சுமை குறையக் காண்பீர்கள். ராசிநாதன் சூரியனின் சஞ்சாரம் தன்னம்பிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.