Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

ரிஷபம் :ஐப்பசி மாத பலனும் பரிகாரமும் ரிஷபம் :ஐப்பசி மாத பலனும் பரிகாரமும் கடகம் : ஐப்பசி மாத பலனும் பரிகாரமும்! கடகம் : ஐப்பசி மாத பலனும் பரிகாரமும்!
முதல் பக்கம் » கார்த்திகை ராசிபலன் (16.11.2020 முதல் 15.12.2020 வரை)
மிதுனம் : ஐப்பசி மாத பலனும் பரிகாரமும்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2020
07:07


மிருகசீரிஷம் 3, 4 பாதம் :      ராசிநாதன் புதன் உச்ச பலத்தோடு உங்கள் நட்சத்திர அதிபதி செவ்வாயும் பலம் பெற்றிருப்பதால் நினைத்ததை சாதிப்பீர்கள். செயல்வேகம் கூடும். முயற்சியில் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட பணிகள் விரைவாக நடந்தேறும். தெளிவான பேச்சால் மதிப்பு உயர்வதைக் காண்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பொருளாதார நிலை சீராகும். சேமிப்பில் இறங்குவதற்கான வாய்ப்புண்டு. சகோதரிக்கு உதவுவீர்கள். அண்டை வீட்டாருடன் மனக்கசப்பு நீங்கும்.  வாகனங்களை மாற்ற சாதகமான நேரம். தாய்வழி சொத்து பிரச்னை முடிவிற்கு வரும். உறவினர் வீட்டு விசேஷங்களில் முக்கியப் பங்காற்றுவீர்கள். பெரிய மனிதர்களுடன் சந்திப்பு நிகழும். புதிய நண்பர்களால் வாழ்வில் திருப்புமுனை உண்டாகும். மாணவர்கள் உற்சாகமுடன் படிப்பர். பிள்ளைகளின் வழியில் கவுரவம் கூடும்.குலதெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உடல்நிலையை பரிசோதிப்பது நல்லது. தம்பதியருக்குள் இணக்கம் கூடும். நண்பருக்கு பணஉதவி செய்வீர்கள். சிக்கன முயற்சி வெற்றி பெறும். பெற்றோருக்கு பணிவிடை செய்து மகிழ்வீர்கள். பணியாளர்கள் சகஊழியர் துணையுடன் சாதனை புரிவர். சுயதொழில் செய்வோர், வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறுவர். எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். ராகுவால் மனதில் கற்பனையான பயம் ஏற்படலாம். மற்றபடி எல்லாம் வெற்றியே.
பரிகாரம் : தினமும் வேல் வழிபாடு செய்யுங்கள்.
சந்திராஷ்டமம்: அக்.23

திருவாதிரை :     ராசிநாதன் புதனின் உச்ச பலத்தால் விவேகமுடன் செயல்படுவீர்கள்.  இருப்பினும் ராகுவால் அலைச்சல் ஏற்படும்.  விரயம் அதிகமானாலும் அதற்கேற்ப வருமானம் வரும். ஒரு செயலில் ஈடுபட்டு அதற்கான முடிவு தெரிவதற்குள் பொறுமை இழப்பீர்கள். எப்பொழுதும் நேர்மறை எண்ணத்துடன் செயல்படுங்கள். முன்கோபம் காரணமாக குடும்பத்தினருடன் வருத்தம் உண்டாகலாம். பேசுவதில் நிதானம் தேவை. உடன்பிறந்தோர் உங்கள் முயற்சிக்குத் துணை நிற்பர்.  அண்டை வீட்டாருடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். மாற்று மொழி பேசுவோரிடம் எச்சரிக்கை தேவை. முன்பின் தெரியாதவர்களுக்கு உதவி செய்து சங்கடத்தை சந்திப்பீர்கள்.  சொத்து வாங்கும் முயற்சிப்போருக்கு கடனுதவி கிடைக்கும். அரசு வகையில் எதிர்பார்ப்பு நிறைவேறும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பர். உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். சோஷியல் மீடியாக்களில் பதிவிடும் கருத்துக்களில் கவனத்துடன் செயல்படுங்கள். பிள்ளைகளின் செயல்பாட்டில் கவனம் தேவை. நோய்த் தொற்றுக்கான வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையுடன் இணைந்து செய்யும் பணிகள் வெற்றி பெறும். நண்பர்களால் நன்மை ஏற்படும். கவுரவத்திற்காக செலவு செய்வீர்கள். பெற்றோருடன் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். பணியாளர்கள் உயரதிகாரிகளிடம் நற்பெயர் காண போராட வேண்டியிருக்கும். சுயதொழில் செய்வோர் வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் காண்பர். வியாபாரிகள் பணப்பரிமாற்றத்தில் கவனமாக இருக்கவும். அவ்வப்போது இரவு உறக்கம் கெடுவதால் சோர்வுக்கு ஆளாகலாம்.
பரிகாரம் : காவல் தெய்வம் குடியிருக்கும் ஆலயத்தின் பூசாரிக்கு நிதியுதவி செய்யுங்கள்.
சந்திராஷ்டம நாள் : அக்.24

புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்:    புத்திகூர்மையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். குருவின் ஆட்சி பலம் உங்களின் திறமையை வெளியுலகிற்கு பறை சாற்றும். குன்றின் மேலிட்ட விளக்காக பிரகாசிப்பீர்கள். பாடகர்கள் குரல் வளத்தால் கேட்போரை வசியப்படுத்துவர்.  நண்பர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பொருளாதார நிலை உயரும். பிள்ளைகளின் எதிர்கால் நலன் கருதி சேமிப்பீர்கள். வயதானவர்கள் கண் பரிசோதனை செய்வது நல்லது. சகோதரியின் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். பெண்களால் நன்மை உண்டாகும். தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் பயனுள்ள வகையில் அமையும். சோஷியல் மீடியா மூலம் உங்களின் தனித்துவத்தை வெளிப்படுத்த முயற்சிப்பீர்கள். வாகனங்களை புதிதாக மாற்ற சாதகமான நேரம் இது. உறவினர் சந்திப்பால் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்தும். மாணவர்கள் மொழிப்பாடங்களில் பிரகாசிப்பார்கள். பிள்ளைகளின் செயல்கள் கவுரவம் தரும். எதிரிகளையும் நண்பர்களாக மாற்றும் கலையை அறிந்திருப்பீர்கள். கடன் பிரச்னைகள் கட்டுக்குள்  வரும். நீரிழிவு நோயாளிகளுக்கு உடல்நிலையில் கவனம் தேவை. தம்பதியருக்குள் இணக்கம் கூடும். குடியிருக்கும் வீட்டினை சுத்தமாக வைப்பதில் ஆர்வம் கொள்வீர்கள். பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்புண்டு. பெற்றோரின் துணையுடன் குடும்பத்தில் நிலவிய சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். பணியாளர்கள் மேலதிகாரியிடம் நற்பெயர் காண்பர். அதே நேரத்தில் கீழ்மட்ட பணியாளர்களிடம் கருத்து வேறுபாடு கொள்ள நேரிடும். வியாபாரிகள் நேர்மையாக செயல்பட்டு மக்கள் மனதில் இடம் பிடிப்பர்.
பரிகாரம் : வியாழக்கிழமையில் குருபகவான் வழிபாடு செய்யுங்கள்.
சந்திராஷ்டம நாள் : அக்.24, 25

 
மேலும் கார்த்திகை ராசிபலன் (16.11.2020 முதல் 15.12.2020 வரை) »
temple
அசுவனி டிச. 9 வரை ராசிநாதன் செவ்வாயின் 12ம் இடத்து வாசம் சற்று அலைச்சலைத் தரும். நினைத்த காரியத்தை செய்து ... மேலும்
 
temple
கார்த்திகை 2, 3, 4ம் பாதம்    இந்த மாதத்தில் நிதானத்தைக் கடைபிடிப்பது அவசியம். மாத துவக்கத்தில் ... மேலும்
 
temple
மிருகசீரிடம் 3, 4ம் பாதம்    ராசிநாதன் புதனின் சஞ்சாரம் சிந்தனையில் மாற்றத்தை தோற்றுவிக்கும். ... மேலும்
 
temple
புனர்பூசம் 4ம் பாதம்     உங்கள் ராசி மீது பார்வையைச் செலுத்தும் குரு மனதில் மகிழ்ச்சியைத் ததும்பச் ... மேலும்
 
temple
மகம் இந்த மாதத்தில் பணிச்சுமை குறையக் காண்பீர்கள். ராசிநாதன் சூரியனின் சஞ்சாரம் தன்னம்பிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.