காரைக்கால்: காரைக்கால், பாரதியார் சாலையில் உள்ள அம்மையார் கோவில் மணிமண்டபத்தில் கயிலாசநாதர் திருக்கோவில் மற்றும் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை சார்பில் நவராத்திரி கொலு தர்பார் நேற்று முன்தினம் துவங்கியது.வரும் 26ம் தேதிவரை நடைபெறும் கொலு தர்பாரை, கோவில் அறங்காவலர் தலைவர் கேசவன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் முன்னிலை வகித்தனர்.இதேப்போல், மாதாகோவில் வீதியில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் கோவில் நிர்வாகம் சார்பில் நவராத்திரி கொலு தர்பார் நடைபெற்றது.நிகழ்ச்சியில் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை அமைப்பாளர்கள் பாலசுப்ரமணியன், மரகதவேல், ரவிச்சந்திரன், இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பக்தர்கள் சமுக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து நவராத்திரி கொலு தர்பாரை பார்வையிட்டனர்.