திண்டுக்கல்: திருப்பதியில் நடக்கும் இரண்டாவது பிரம்மோற்ஸவ விழாவினை முன்னிட்டு பழநி புஷ்பகைங்கர்யா சபா மூலம் திருப்பதிக்கு பூக்கள் அனுப்புவது வழக்கம். கொரோனா ஊரடங்கால் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பூக்கள் செல்வதற்கு பதிலாக, ஆந்திரா பகுதியிலேயே பெற்று அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு அக்.16 முதல் அனுப்பப்படுகிறது. வரும் 25ம் தேதி வரை தினமும் ஒரு டன் வீதம் பூக்கள் அனுப்பப்படும்.சபா தலைவர் ஹரிஹர முத்து, சிறப்பு ஆலோசகர் சிற்றம்பல நடராஜன், நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்துள்ளனர். செயலாளர் மருதசாமி கூறுகையில், 17 ஆண்டுகளாக பூக்களை அனுப்புகிறோம். பூக்களை அனுப்ப விருப்பமுள்ளோர் 94434 03026ல் பேசலாம் என்றார்.