களக்காடு : களக்காடு பெரிய கோயில் வைகாசி தேரோட்ட திருவிழா நாளை (25ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. களக்காடு சத்தியவாகீஸ்வரர்-கோமதியம்பாள் கோயில் (பெரிய கோயில்) வைகாசி தேரோட்ட திருவிழா நாளை (25ம் தேதி) காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தினமும் சுவாமி, அம்பாள் வீதிஉலா, சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடக்கிறது. இரவு சமய சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும் ஜூன் 2ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடக்கிறது. மாலை 5 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேர் நான்கு ரத வீதிகளை சுற்றி நிலையம் வந்து சேரும். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், பக்தர் பேரவை, பொதுமக்கள் செய்து வருகின்றனர்.