அன்ன வாகனத்தில் சரஸ்வதி இருப்பதாக வேதங்கள் போற்றுகின்றன. அன்ன வாகன சரஸ்வதியை ‘அம்சவல்லி’ என்பர். வெள்ளை நிற அன்னம் போல மனிதன் வெள்ளை மனதுடன் இருக்க வேண்டும். சரஸ்வதியின் வெள்ளை நிறப் புடவையும், வெள்ளை தாமரையும் இதையே வலியுறுத்துகின்றன. தென்னகத்தில் சரஸ்வதி மயில் வாகனம் கொண்டவளாக இருக்கிறாள். ரவிவர்மா ஓவியங்களில் மயில் இடம் பெற்றிருக்கும். தோகையை விரிப்பதும், மடக்குவதுமாக இருக்கும் மயில் போல அறிவில் விரிந்தும், பண்பில் அடங்கியும் நாம் வாழ வேண்டும் என்பதே இதன் தத்துவம்.