பதிவு செய்த நாள்
25
அக்
2020
03:10
சென்னை: வடபழநி சுற்றுப்புறங்களில், ஜெர்மன் தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட மழை நீர் வடிகால் காரணமாக, முருகன் கோவில் குளத்தில் தண்ணீர் தேங்க துவங்கி உள்ளது.
சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், வடபழநி ஆண்டவர் கோவில் குளத்திற்கு, ஜெர்மன் தொழில்நுட்பத்தில், 50 லட்சம் ரூபாய் செலவில், மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டது. இப்பணி, ஆண்டவர் கோவில் தெரு வழியாக, வடபழநி ஆண்டவர் கோவில் குளத்திற்கு நீர் செல்வதற்காக, ௧,௦௦௦ அடி நீளத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிகள் காரணமாக, சில தினங்களுக்கு முன், சென்னையில் ஒரே நாளில், வடபழநி பகுதியில், 47.57 மி.மீ., மழை பெய்தது. இதன் காரணமாக, குளத்தின் நீர் மட்டம் அதிகரிக்க துவங்கியுள்ளது.இதுகுறித்து, மாநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமார் கூறுகையில், சாலைகளில் தேங்கும் மழை நீர், வடிகால் வழியாக குளத்திற்கு வருகிறது. இதனால், தற்போது, 50 செ.மீ., அளவிற்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளது. அடுத்து பெய்யும் மழை காரணமாக, விரைவில் குளம் நிரம்பும், என்றார்.