தசாரா விழா மசினியம்மன், சிக்கம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25அக் 2020 03:10
கூடலூர்: மசினகுடி, மசினியம்மன் கோயிலில், சரஸ்வதி பூஜையை முன்னிட்டு தசரா கொலு திருவிழா 16ம் தேதி துவங்கியது. இதற்காக மாயார் சிக்கம்மன் கோவிலிருந்து, சிக்கம்மனை பழங்குடி மக்கள் ஊர்வலமாக, மசியம்மன் கோவிலுக்கு எடுத்து வந்தனர். தொடர்ந்து 17ம் தேதி மசியம்மன், சிக்கம்மன் சிறப்பு அலகாரத்துடன் கொலு வைத்து, தசரா பூஜை விழா துவக்கியது. கடைசி நாளில் நடந்த விழாவில் மசினியம்மன், சிக்கம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பக்தர்கள் அம்மன்களை தரிசித்து சென்றனர். மாலை வரை சிறப்பு பூஜை நடந்தது. கோயில் கமிட்டியினர் கூறுகையில், அரசு அறிவித்த கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பின்பற்றி பூஜைகள் நடந்தது என, கூறினார்.