பதிவு செய்த நாள்
26
அக்
2020
10:10
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், வரும் ஐப்பசி பவுர்ணிக்கு, கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படுமா என, பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
வரும், 31ம் தேதி அதிகாலை, 1:14 மணி முதல், நவ., 1 அதிகாலை, 12:57 மணி வரை, பவுர்ணமி திதி உள்ளது. கடந்த ஏழு மாதங்களாக, கொரோனா ஊரடங்கால், பவுர்ணமி கிரிவலத்துக்கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில், வரும் ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை நீக்கப்படுமா என, பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதற்கிடையில், திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும், 30ல் அன்னாபிஷேகம் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, அன்று மாலை, 3:00 மணி முதல், 6:00 மணி வரை கோவில் நடை சாத்தப்படும். 6:00 மணிக்கு மேல், சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.