Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வித்யாரம்பம் லலிதாம்பிகை கோவிலில் ஆன்மீக நூல் வெளியீடு லலிதாம்பிகை கோவிலில் ஆன்மீக நூல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு வரும் 31ல் அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு வரும் 31ல் அன்னாபிஷேகம்

பதிவு செய்த நாள்

27 அக்
2020
10:10

பெரம்பலுார்: கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் இம்மாதம் 31ம் தேதி ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் நடக்கிறது.

அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ளது பிரகதீஸ்வரர் கோவில். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழனால் கங்கை நதி வரை போராடி வெற்றி பெற்ற சின்னமாக கட்டப்பட்ட இக்கோயில் உலகப்பிரசித்தி பெற்றது. புராதான சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது. கோவிலில் சிங்கமுக கிணறு, ஒரே கல்லிலான நவக்கிரகம் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் உள்ள உலக அளவில் வியக்கக்கூடியதில் ஒன்றாக கோவிலில் உள்ள சிவலிங்கம் 60 அடி சுற்றளவும், பதிமூன்றரை அடி உயரமும் கொண்டதாகும். ஒவ்வொரு வருடமும் ஐப்பசி பௌர்ணமியன்று, அரிசியால் சாதம் சமைத்து காலை 9 மணிமுதல் கோவிலில் உள்ள பிரகதீஸ்வரர் லிங்கத்திற்கு அபிஷேகம் துவங்கி மாலை 6 மணியளவில் தீபாராதனை நடைபெறும்.

லிங்கத்தின் மேல் சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையைப் பெறுகிறது. இதனால், ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த கோவிலில் படைக்கப்படும் அன்னம் பக்தர்களுக்குப் பிரசாதமாக இரவு 9 மணி அளவில் வழங்கப்படும். மீதமுள்ள சாதம் அருகில் உள்ள குளங்களில் மீன்களுக்கு உணவாக கொடுக்கப்படும். ஆண்டுதோறும் கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் நடக்கும் அன்னாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக வெளிநாடுகளிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார். 36 வது ஆண்டு அன்னாபிஷேகம் ஐப்பசி பௌர்ணமி நாளான வரும் 31ம் தேதி நடக்க இருக்கிறது. பக்தர்களுக்கு அனுமதி இல்லை: கொரோனா நோய்த்தொற்று காரணமாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதற்கு அரசு மற்றும் மாவட்ட நிர்வாக தடை காரணமாக ஆண்டுதோறும் நடைபெறுவது போல் இல்லாமல் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனுமதியின்றி, சுவாமி மற்றும் அம்பாளுக்கு காலை மகாபிஷேகம் மாலை அன்னகாப்பு தீபாராதனை செய்வதற்கு ஏற்கனவே அரசு தெரிவித்துள்ள 12 விதிமுறைகளுடன் இந்து சமய அறநிலையத் துறை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த விதிமுறையே தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 கோவை: ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணேஸ்வரி கோயிலில், தீபாவளி பண்டிகையையொட்டி,  1,008 லட்டுகளால் கருவறை ... மேலும்
 
temple news
 தீபாவளி பண்டியை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
 திண்டிவனம்: தீபாவளியை முன்னிட்டு, திண்டிவனத்தில் பெண்கள் கேதார கவுரி நோன்பு எடுத்து வழிப்பட்டனர். ... மேலும்
 
temple news
 விழுப்புரம்: விழுப்புரம் மழுக்கரமேந்திய அமைச்சார் அம்மன் கோவிலில் பக்தர்கள் சதுர்தசி நோன்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar