பதிவு செய்த நாள்
25
மே
2012
10:05
புதுச்சேரி : பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ஜநேயர் ஆலயத்தில் வசந்த உற்சவம் இன்று துவங்குகிறது.புதுச்சேரி அடுத்த பஞ்சவடீயில் பஞ்சமுக ஆஞ்ஜநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு, இன்று (25ம் தேதி) முதல் வரும் 27ம் தேதி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை, பட்டாபிஷேக ஸ்ரீராமபிரான் பரிவாரங்களுக்கு வசந்த உற்சவமும், விசேஷ திருமஞ்சனமும் நடக்கிறது. விழாவினை முன்னிட்டு, மேற்கண்ட மூன்று நாட்களும் காலை 8 மணிக்கு ஸ்ரீராமர் மூலவர் பரிவாரங்களுக்கு அபிஷேகமும், மாலையில் உற்சவர்கள் கோதண்டராமர், சீதா, லட்சுமணர், ஆஞ்ஜநேயருக்கு விசேஷ பால், சந்தனம் மற்றும் மங்கள திரவியங்களால் அபிஷேகம், விசேஷ திருவாராதனம், வேத திவ்ய பிரபந்த கோஷங்களுடன் நடக்கிறது. உலக நன்மைக்காக நடக்கும் வசந்த உற்சவத்தில் பங்கு பெற விரும்பும் பக்தர்கள், கோவில் அலுவலகத்தில் இன்று மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என, பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.