பதிவு செய்த நாள்
28
அக்
2020
01:10
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், தொடர்ந்து எட்டாவது மாதமாக, பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையிலுள்ள, மலையை சிவனாக பாவித்து, பவுர்ணமிதோறும் கிரிவலம் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்கள், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசிப்பர். கொரோனாவால், கடந்த மார்ச் மாதத்தில் இருந்து, கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த அக்., 1ல், புரட்டாசி மாத பவுர்ணமி தடை விதித்த நிலையில், வரும், 30ல், ஐப்பசி மாத பவுர்ணமி வருகிறது. பவுர்ணமி திதி, 30ல், மாலை, 6:45 மணிக்கு தொடங்கி, 31ல், இரவு, 8:49 மணி வரை உள்ளது. இந்நிலையில், தொடர்ந்து எட்டாவது மாதமாக, ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலத்துக்கு, மாவட்ட நிர்வாகம், தடை விதித்துள்ளது. பவுர்ணமி நாளில் கோவில் தரிசனத்துக்கு, பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். வரும், 30ல், அன்னாபிஷேகத்தை முன்னிட்டு, அன்று மாலை, 3:00 முதல், 6:00 மணி வரை, தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதியில்லை. அருணாசலேஸ்வரர் கோவிலில், நவ., 20ல், கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கி, தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கும். விழாவில், நவ.,29ல், மகாதீபம் ஏற்றப்படும். இதற்கு பக்தர்கள் அனுமதிக்கப் படுவார்களா, கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலத்துக்கு அனுமதி கிடைக்குமா என, பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.