தேவிபட்டினம் : தேவிபட்டினம் அருகே அழகன்குளம் ஸ்ரீ ராதா ருக்மணி சமேத ஸ்ரீ நவநீதகிருஷ்ணர் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு நவநீத கிருஷ்ணர், கருடாழ்வார், தன்வந்திரி, காளிங்க நர்த்தனர், நரசிம்மர், பஞ்சமுக ஆஞ்சநேயர், ஹயக்ரீவர், பஞ்சமுக விநாயகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், கன்னி பூஜையும் நடைபெற்றன. நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு பெண்கள் வழிபாடு செய்தனர். நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.