புதுச்சேரி; சர்வ மங்கள சாய்பாபா கோவிலில், சாய்பாபாவின் 102வது ஆண்டு சமாதி தினஆராதனைவிழா நடந்தது.குருமாம்பேட் அருகே உள்ள பங்களாமேடு, சாய்ராம் சிட்டியில் உள்ள சர்வமங்கள சாய்பாபா கோவிலில் நேற்று, , சீரடி சாய்பாபாவின் 102 வது ஆண்டு சமாதி தின ஆராதனை விழா நடந்தது.அதனையொட்டி நேற்று காலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் கொடியேற்றம் நடந்தது. 6:10 மணிக்கு ஆரத்தி வழிபாடு, காலை 9:00 மணிக்கு இளநீர் அபிேஷகம், 9:30 மணிக்கு பக்தர்கள் மூலம் சாய்பாபாவுக்கு பால் அபிேஷகம், பகல் 12:00 மணிக்கு ஆரத்தி வழிபாடு நடந்தது.பகல் 1:30 மணிக்கு பாபா சமாதி தின கூட்டு பிரார்த்தனை சாய் பக்தர்கள் எழுதிய சாய் நாமாவளி பிரதிகள் பாபாவின் பீடத்தில் சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது.மாலை 6:00 மணி மற்றும் இரவு 8:00 மணிக்கும் ஆரத்தி நடந்தது.