பதிவு செய்த நாள்
28
அக்
2020
04:10
ஆத்தூர்: ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன், அம்மன் கோவில்களில், விஜயதசமியை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆத்தூர் அடுத்த, தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில், சொர்ணபுரீஸ்வரர், சொர்ணாம்பிகை அம்மன் மற்றும் ஜீவ சமாதியடைந்த காகபுஜண்டர் ஆகிய சுவாமிகளுக்கு, சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன. மூலவர் சொர்ணபுரீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஆத்தூர் சம்போடை வனத்தில் உள்ள, மதுரகாளியம்மன் கோவிலில், நவராத்திரி பூஜை நடந்தது. வெள்ளை விநாயகர் கோவில் வளாகத்தில் பக்தர்கள், தங்களது குழந்தைகளை அழைத்து வந்து, நெல் மற்றும் அரிசியில் எழுத வைத்து, வழிபாடு செய்தனர். விஜயதசமியொட்டி, மதுரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. ஆறகளூர் காமநாதீஸ்வரர், அம்பாயிரம்மன், வீரகனூர் பொன்னாளியம்மன், ஆத்தூர் கோட்டை காயநிர்மலேஸ்வரர், கைலாசநாதர் உள்ளிட்ட கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன.