பதிவு செய்த நாள்
28
அக்
2020
04:10
அரூர்: அரூரில், கொரோனா நோய் தொற்றில் இருந்து விடுபட வேண்டி, கம்பராமாயணம் பாலகாண்டம் தொடர் சொற்பொழிவு நடந்தது. அரூர் மேட்டுத்தெருவில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை சமேத ஸ்ரீ வரதராஜபெருமாள் கோவிலில், மக்கள் அனைவரும் நலமுடன் வாழவும், கொரோனா நோய் தொற்றில் இருந்து விடுபட வேண்டியும், நவராத்திரி வழிபாடு நடந்தது. அரூர் கவிப்பேரரசு கம்பன் கழகம் சார்பில், கடந்த, 22 முதல், 26 வரை, கம்பராமாயணம், பாலகாண்டம் தொடர் சொற்பொழிவு நடந்தது. தினமும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், அரூர் கம்பன் கழக தலைவர் செவ்வேள்முருகன், துணைத் தலைவர் மலர்வண்ணன், செயலாளர் செம்முனி உள்ளிட்டோர் சொற்பொழிவாற்றினர்.