சதுரகிரியில் ஐப்பசி பவுர்ணமி: 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29அக் 2020 10:10
வத்திராயிருப்பு,:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கபடுகிறார்கள். மழை பெய்தால் மலையேறுவது நிறுத்தி வைக்கபடும் என வனத்துறை அறிவித்துள்ளது. பக்தர்கள் முககவசம் அணிந்து வர வேண்டும். குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய் பாதிப்புள்ளவர்களுக்கு அனுமதியில்லை. இரவில் மலையில் தங்க அனுமதி கிடையாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பிரதோஷ வழிபாடு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் கனமழை எச்சரிக்கையால் பிரதோஷ வழிபாட்டிற்கு பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது. சதுரகிரியில் சில நாட்களாக பெய்த மழையால் ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டது. தற்போது கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மழை பெய்தால் பக்தர்களுக்கு அனுமதியில்லை என வனத்துறை அறிவித்தது. பிரதோஷ வழிபாட்டிற்காக நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் தாணிப்பாறைக்கு வந்தனர். பின் காலை 6:30 மணிக்கு மேல் மலையேற பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது.மதியம் 1:00 மணி வரை 450 பக்தர்கள் மட்டுமே மலையேறினர். வனப்பகுதியில் மழைபெய்யும் சூழல் நிலவியதால் விரைவில் சாமி தரிசனம் செய்து திரும்புமாறு பக்தர்கள் அறிவுறுத்தபட்டனர். இதையடுத்து பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு கீழே இறங்கினர். ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜாபெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாதன் செய்திருந்தனர்.