புதுச்சேரி; குயவர்பாளையம் புட்டலாயம்மன் கோவிலில் நவராத்திரி விழாவின் விடையாற்றி உற்சவத்துடன் நிறைவு பெற்றது.குயவர்பாளையம் செல்லபெருமாள் கோவில் வீதியில் அமைந்துள்ள புட்டலாயம்மன் கோவிலில் 3ம் ஆண்டு நவராத்திரி விழா கடந்த 16ம் தேதி துவங்கியது. இதனையொட்டி, தினமும் காலை 9:00 மணிக்கு மகா அபிேஷகமும், மாலை 7:00 மணிக்கு பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் அம்மனுக்கு விடையாற்றி உற்சவம் நடந்தது. இதையொட்டி, மாலை 7:00 மணிக்கு புட்டலாயம்மன் திருமலை திருப்பதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.