பதிவு செய்த நாள்
29
அக்
2020
12:10
புதுச்சேரி: மனமுருகி வராகியை வணங்கினால், வாழ்வில் ஏற்றமும் மாற்றமும் அளிப்பாள் என, பரத்வாஜ் சுவாமிகள் அருளாசி வழங்கினார்.
சென்னை, அம்பத்துார் ஸ்ரீயோகமாயா புவனேஸ்வரி பீடத்தின், பீடாதிபதி பரத்வாஜ் சுவாமிகள், நேற்று புதுச்சேரி லாஸ்பேட்டை, சாந்தி நகர், இளங்கோ அடிகள் வீதியில் தங்கி அருளாசி வழங்கினார்.அப்போது, அவர் கூறியதாவது:வராகி அம்பாளின் அவதார காலம், தற்போது எங்கும் பரவி நிறைந்து அருட்கோலம் கொண்டு பக்தர்களுக்கு ஆனந்த வாழ்வை உண்டு பண்ணி வருகிறார். போர்படை தலைவி, போர்குணம் கொண்ட ஸ்ரீ ராஜராஜேஸ்வரி தேவியின் வலது முன் கையில் பஞ்சபாணத்திலிருந்து தோன்றியவள் வராகி.செவ்வரளி, செந்தாமரை உள்ளிட்ட மலர்களால் பூஜிப்பதால், ஆனந்தம் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
பூசணிக்காய் தீபம், தேங்காய் தீபம், நவதான்ய தீபமும் வராகி ஏற்று மகிழ்கிறாள். வராகி மாலை ஸ்தோத்ரத்தை படித்து பாராயணம் செய்வதால், பகை, விரோதம், குரோதம், துர்க்குணம், துர்புத்தி, கெட்ட செயல், தீய எண்ணங்கள் மறைகிறது. எதிரிகளின் தொல்லையும் மறைகிறது.பக்தியுடன், நெஞ்சுருகி வராகியை வேண்டினால், கலி வந்து அணுகாமல் காத்திடுவாள் வராகி.பக்தர்கள் வராகி வழிபாட்டினை படமோ, தீபமோ, விக்ரகமோ வைத்து, மதி நுட்பமுடன், அனுக்கிரகமும் பெற்ற குருமார்களிடம் தீச்சை பெற்று செய்து வந்தால் வாழ்வு வளம் பெரும் என்றார்.