மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் 10 உப கோயில்களின் உண்டியல்கள் இணைகமிஷனர் செல்லத்துரை தலைமையில் எண்ணப்பட்டன. மொத்தம் ரூ.33 லட்சத்து 78 ஆயிரத்து 629 ரொக்கம் வருவாயாக கிடைத்தது. தங்கம் 350 கிராம், வெள்ளி 525 கிராம், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் 17 கிடைத்தன.