ராஜபாளையம்: ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே ஹிந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அக். 27ல் தொடங்கிய இவ்விழா மங்கல இசை, வேத பாராயணம், மூன்றாம் கால யாகபூஜைகள், ஆன்மிககச்சேரி உள்ளிட் டபல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று அதிகாலை நான்காம் கால பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் காலை 9:00 மணிக்கு விமான கலசத்தில் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. இதன் பின் ராஜகோபுரம், நந்தி, கொடிமரம், பரிவாரமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியசுவாமி சிலைகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. மாலையில் முளைப்பாரியுடன் அம்மன் வீதிஉலா வர பக்தர்கள் வணங்கினர்.