திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் ஆஸ்பிடல் ரோட்டில் உள்ள பழமையான பாலசுப்பிரமணியர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
திருக்கோவிலூர் ஆஸ்பிடல் ரோட்டில் உள்ள பாலசுப்பிரமணியர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு காலை 8:00 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணியர்க்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, 11:00 மணிக்கு அர்ச்சனை நடந்தது. கோவில் திருப்பணிக்காக பாலாலயம் செய்யப்பட்ட நிலையில், எளிமையான முறையில் நடந்த சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் தனிமனித இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.