கம்பம், க.புதுப்பட்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி பக்தர்கள் பரவசத்துடன் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இங்குள்ள அம்மன் சுயம்புவாகும். அனுமந்தன்பட்டி மற்றும் புதுப்பட்டியில் தலா 7 நாட்கள் வீதம் 15 நாட்கள் திருவிழா நடக்கும். அனுமந்தன்பட்டி திருவிழா முடிந்தவுடன் அம்மன் சிலை புதுப்பட்டி கோயிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. தினமும் ஒவ்வொரு சமூகத்தை சேர்ந்தவர்கள் மண்டகப்படி நடத்துகின்றனர். கோயில் வளாகத்தில் முளைப்பாரி, மாவிளக்கு, அக்னிசட்டி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்கள் பக்தர்களால் நிறைவேற்றப்பட்டது. ஒக்கலிக கவுடர் மகாஜனசங்கம் சார்பாக வண்டிவேஷம் நடந்தது.