பதிவு செய்த நாள்
09
நவ
2020
11:11
அதியமான்கோட்டை: தேய்பிறை அஷ்டமி தினமான நேற்று, அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தர்மபுரி அருகே அதியமான்கோட்டையில், தட்சணகாசி காலபைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி விழா நேற்று நடந்தது. இதையொட்டி அஷ்ட பைரவர் யாகம், அஷ்ட லட்சுமி யாகம் உள்ளிட்ட யாகங்கள் நடந்தன. தொடர்ந்து, 64 வகையான அபிஷேகங்கள், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜைகள் மற்றும் ராகு கால சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் அருள்பாலித்தார். கொரோனா பரவலால், உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பிறகே, கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.