திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி பூர விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2020 10:11
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி பூர திருவிழாவை முன்னிட்டு, உற்ஸவர் சன்னதியில் தெய்வானை மட்டும் எழுந்தருளினார். அம்பாள் முன், வெள்ளி குடத்தில் புனிதநீர் நிரப்பி பூஜை நடந்தது. அரிசி, நெல், வெல்லம், வெற்றிலை, பாக்கு, காதோலை கருகமணி, வேப்பிலை, மஞ்சள் கிழங்கு, வளையல்கள், வாழைப்பழம் வைத்து யாகம் வளர்க்கப்பட்டு அம்பாளுக்கு காப்பு கட்டப்பட்டது. படிகளில் வைக்கப்பட்டிருந்த நெல், அரிசி அம்பாள் முன் மூன்றுமுறை ஏற்றி இறக்கும் நிகழ்ச்சி முடிந்து அபிஷேகம் நடந்தது. தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு வளையல்கள் வழங்கப்பட்டன.