மேல்மலையனுார் கோவிலில் ரூ.30 லட்சம் உண்டியல் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2020 02:11
செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் 30 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தி இருந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று உண்டியல் எண்ணும் பணி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் மேல்மலையனுார் ராமு, விழுப்புரம் ஜோதி ஆகியோர் தலைமையில் நடந்தது.இதில் 30 லட்சத்து 53 ஆயிரத்து 461 ரூபாய் ரொக்கம், -215 கிராம் தங்க நகைகள், 465 கிராம் வெள்ளி நகைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். அறங்காவலர்குழு தலைவர் சரவணன், அறங்காவலர்கள் செந்தில்குமார், தேவராஜ், ராமலிங்கம், செல்வம், வடிவேல், சந்தானம், ஆய்வாளர் அன்பழகன், மேலாளர் மணி மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.