கார்த்திகை முதல் நாள்: மாலை அணிந்து விரதம் துவக்கிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16நவ 2020 09:11
சென்னை: கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டனர். இதனால் கோயில்களில் ஐய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல கால பூஜை கார்த்திகை மாதம் முதல் தேதி துவங்குவது வழக்கம்.
இந்த நாளில் ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து விரதம் துவங்குவர். சபரிமலை கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கோயில்களில் குருசுவாமி துணையுடன் மாலையணிந்து 41 நாட்கள் கடும் விரதமிருப்பது வழக்கம். இந்த ஆண்டு கார்த்திகை முதல் நாளான இன்று (16ம் தேதி) காலை சென்னை, மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில் குருசுவாமி துணையுடன் ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து விரதம் துவக்கினர். இதனால் கோயில்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாலை அணியும் பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் கோயில் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு, மாலை அணிந்து கொண்டனர். சென்னை, புது வண்ணாரப்பேட்டை ஐயப்பன் சன்னதியில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து விரதம் துவக்கினர். மாலையிட்ட பக்தர்கள் தினமும் காலை குளித்து கோயில்களுக்கு சென்று சரண கோஷம் எழுப்புவர். இதனையடுத்து பல்வேறு பகுதிகளில் சரண கோஷம் எதிரொலிக்கும்.