பதிவு செய்த நாள்
17
நவ
2020
05:11
சென்னை : ராமநாதபுரம், தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட கிராமக்கோவில் பூசாரிகளுக்கு, விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் கிராம பூசாரிகள் பேரவை சார்பில், தீபாவளி பரிசாக, ௮ லட்சம் ரூபாய் மதிப்பிலான, நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
கிராம கோவில் பூசாரி களுக்கு, பக்தர்கள் தட்டில் போடும் காணிக்கை தான் வாழ்வாதாரம். ஊரடங்கால், கிராம கோவில்களில், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், வாழ்வாதாரமின்றி, கிராம கோவில் பூசாரிகள் தவித்து வந்தனர்.பூசாரிகளின் நிலையை கருத்தில் கொண்டு, அவர்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் வகையில், விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில், நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.இது குறித்து, பேரவை நிறுவனர் வேதாந்தம் கூறியதாவது:ஊரடங்கால் வாழ்வாதாரமின்றி தவிக்கும் கிராம பூசாரிகள், குடும்பத்துடன் மன நிறைவுடன், தீபாவளியை கொண்டாடும் வகையில், நிவாரணப் பொருட்களை வழங்க முடிவு செய்தோம்.
இதையடுத்து, ராமநாதபுரம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட பூசாரிகளின் குடும்பத்திற்கு தேவையான, அரசி மூட்டை, பருப்பு, ரவை, எண்ணெய் உள்ளிட்ட, ௮ லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டன.இவ்வாறு, அவர் கூறினார்.