பதிவு செய்த நாள்
17
நவ
2020
05:11
மாமல்லபுரம்: புதுப்பட்டினத்தில், இஸ்லாமியர் தேநீர் கடையில், வேம்பு, துளசி இலைகள் கட்டிய மத நல்லிணக்கம், வாடிக்கையாளர்களை கவர்ந்தது.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த, புதுப்பட்டினத்தில், இஸ்லாம் மதத்தினர், அதிகம் வசிக்கின்றனர்.இங்கு, சில்க் காதர், 62, என்பவர், பஜார் வீதியில், நீண்ட காலமாக, தேநீர் கடை நடத்துகிறார். இக்கடை வாடிக்கையாளர்களாக, ஹிந்து மதத்தினரும் உள்ளனர்.கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பைத் தொடர்ந்து, ஹிந்துக்கள், தங்கள் வீட்டு வாயிலில், அவ்வப்போது, மஞ்சள்நீர் தெளித்து, வேப்பிலை கட்டினர். ஹிந்து மதத்தினர், அம்மன் வழிபாட்டில், மஞ்சள், வேம்பு என, பயன்படுத்துகின்றனர்.இவை, இயற்கை கிருமிநாசினி என்பதை உணர்ந்தே, நம் மூதாதையர், இவற்றை, ஆன்மிக நடைமுறையாக பின்பற்றினர்.கொரோனா வைரஸ் தொற்று பரவல் சூழலில்,இஸ்லாமியர், அவரது கடையில், வேம்பு, துளசி இலைகளை கட்டி வைக்கிறார். இந்து மத வாடிக்கையாளர்கள், இதை கண்டு வியக்கின்றனர்.இது குறித்து, சில்க் காதர் கூறுகையில், ஹிந்து கோவில்களில், வேப்பிலையும், துளசியும், பயன்படுத்துவர். இரண்டும், சிறந்த கிருமி நாசினி. இதை உணர்ந்தே, மதம் சார்ந்து கருதாமல், என் கடையிலும் கட்டியுள்ளேன், என்றார்.