வால்பாறை: வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், கார்த்திகை மாதம் சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேக விழா நடந்தது.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை மாதம் சோமவாரத்தை முன்னிட்டு, 108 சங்காபிஷேக விழா நடந்தது. காசிவிஸ்வநாதர் சன்னதியில் நடந்த விழாவில், மாலை, 5:30 மணிக்கு கணபதி ஹோமமும், 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. சிவலிங்க வடிவில் சங்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் சமூக இடைவெளிவிட்டு சுவாமியை தரிசித்தனர்.